வருமானத்திற்கு அதிகமாக 5.53 கோடி அளவிற்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு எதிராக சிபிஐ சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் நீலகிரி தொகுதி எம்பி மாநாடு ஆ.ராசா கடந்த 1999 முதல் 2010 ஆம் வருடம் வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருக்கின்றது. இந்த நிலையில் கடந்த 2015 ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 17 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. அவற்றின் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக ஐந்து கோடி 53 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உட்பட ஆறு பேருக்கு எதிராக சிபிஐ சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றது. மேலும் இந்த குற்றப்பத்திரிக்கையில் 2ஜி ஸ்பேக்டோகிராம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றதாக சிபிஐ வட்டாரங்கள் கூறியுள்ளது. ஏற்கனவே 2 ஜி வழக்கில் 2017ல் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஆ.ராசாவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த வருடம் பயிற்சி அலைக்கற்றை ஏலத்திற்கு பின் தன் மீது குற்றச்சாட்டுகள் பற்றி பேசிய ராசா 2ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு பின் 1.76 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று கூறியதை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் தற்போது 5 அலைக்கற்றை ஏலத்தில் முறை கேட்டு நடைபெற்றிருக்கிறது என கூறிய ஆ.ராசா பயிற்சி அலைக்கற்றை ரூபாய் 5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என மத்திய அரசு தெரிவித்தது ஆனால் 1.5 லட்சம் கோடிக்கு தான் சென்று இருக்கின்றது. மீதமுள்ள பணம் எங்கு செல்வது என்பது பற்றி மத்திய அரசுதான் பதில் அளிக்க வேண்டும் முறையாக நடத்தப்படவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.