சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெடுகுளா ஒசட்டி கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் சிறுத்தையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.