திமுக ஆட்சிக்காலத்தில் வாங்கிய கடனுக்கு நாங்கள் வட்டி செலுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்று முதல்வர் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் தரக்குறைவாக பேசிய திமுகவின் RS பாரதி ஊடகங்கத்தையும் மிக அவதூறாக விமர்சனம் செய்தார். அதை ஊடகம் கண்டுகொள்ளவில்லை.
7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.திமுக ஆட்சி காலத்தில் வாங்கிய கடன் தொகைக்கு தற்போது நாங்கள் வட்டி கட்டிக் கொண்டிருக்கின்றோம். கே.சி பழனிச்சாமி கட்சியிலே கிடையாது. அதிகம் தவறு செய்துள்ளார். அதிக முறை ஜெயிலுக்கு போனவர். அவர் ஒரே ஆளே கிடையாது.