பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் சட்டமன்ற துணை தலைவராக ஆர்.பி உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரைக்கும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க கூடிய நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் எழுந்து, அதன் பிறகு அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவில் துணை தலைவராக ஆர்பி உதயகுமாரை ஏற்கனவே அந்த கட்சி தேர்ந்தெடுத்து இருக்கிறது.
இது தொடர்பான ஒரு கடிதம் என்பது ஏற்கனவே சபாநாயகருக்கு அதிமுக சார்பில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆர்.பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம். அவருக்கான இருக்கையை ஒதுக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை கடிதம் என்பது ஏற்கனவே சபாநாயகரிடம் அதிமுக கொரடா எஸ்பி வேலுமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொடுத்தார். இந்த நிலையில் எதிர் கட்சி துணைத் தலைவராக நான் தொடர்ந்து இருந்துள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் இருந்தும் கடிதம் என்பது கொடுக்கப்பட்ட நிலையிலே, இன்று மீண்டும் அதே விஷயத்தை வலியுறுத்தி ஓபிஎஸ் சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக தான் தொடர்ந்து இருப்பதாகவும், அதிமுக தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் தன்னை கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்ற ஒரு விஷயத்தை முன்னிறுத்தி அந்த கடிதத்தை ஓபிஎஸ் சபாநாயகர் எழுதியிருந்தார். இந்நிலையில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஒரு கடிதம் என்பது சபாநாயகருக்கு தற்போது எழுதப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஆர்.பி உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளோம். அலுவல் குழு கூட்டம் ஆகட்டும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரை அழைப்பதாக இருந்தாலும், ஆர்.பி உதயகுமாரையே சபாநாயகர் அழைக்க வேண்டும் என்று முன்னிறுத்தி இந்த கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ளார். எதிர்க்கட்சி துணை கொறடா நேரடியாக சென்று சபாநாயகர் அலுவலகத்தில் இந்த கடிதத்தை எதிர்க்கட்சித் தலைவர் சார்பாக வழங்கியுள்ளார்.