Categories
மாநில செய்திகள்

மழைக்கு முன்பு…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு…. கூட்டுறவு சங்கம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணைய பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கத்தின் பதிவாளர் சண்முகம் சுந்தரம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் மழை மற்றும் புயல் காரணமாக பாதிப்பிற்கு உள்ளாக கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு உடனடியாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு பெற்று தேவையான பொருட்களின் நகர்வு செய்து, பாதுகாப்பாக சேமித்து வைக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களை நகர்வு மற்றும் வினியோகத்தை அன்றாடம் கண்காணித்து அனைத்து கிடங்குகள் மற்றும் நியாய விலை கடைகளிலும் போதுமான அளவு அத்தியாவசிய பொருட்கள் இருப்பு உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழக நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் எந்த ஒரு கிடங்கிலும் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு குறைவாகவோ அல்லது இல்லாமல் இருப்பின் அதை சம்பந்தப்பட்ட மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், தமிழக நுகர்வோர் வாணிப கழகம் மேலாண்மை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இதனையடுத்து அரிசி,‌ மண்ணெண்ணெய், உப்பு, மெழுகுவர்த்தி, அவசர கால விளக்கு மற்றும் தீப்பெட்டிகள் தேவையான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். இயற்கை பேரிடர் காரணமாக ஏற்படும் அவசரநிலை எதிர்கொள்ள அதிகப்படியான மண்ணெண்ணெய் இருப்பு வைத்துக்கொள்ள ஏதுவாக தேவையான மண்ணெண்ணெய் பேரல்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் பொது விநியோகத் திட்ட பொருட்களை நகர்வு செய்வதற்கு மாற்று வழித்தடங்கள் மற்றும் முன்னேற்பாடு விவரங்கள் அடங்கிய அவசரகால திட்டம் ஒன்றினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் சேதம் அடைந்து, நுகர்வோருக்கு ஏற்றதாக இல்லாதபோது அப்பொருளை அப்புறப்படுத்திவிட்டு அதற்கு மாற்றாக நல்ல பொருட்களை நியாய விலை கடைகளுக்கு காலம் தாழ்த்தாமல் உடனே அனுப்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேலும் பொது விநியோக திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை தகுதியான நிலையில் வைத்திருக்க வேண்டும். பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொதுவிநியோக திட்ட பொருட்களின் நகர்வு செய்யும் போக்குவரத்து ஒப்பந்ததாரர்கள் நல்ல நிலையிலான வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |