Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் தொழில் நிறுவனங்களில் திடீர் ஆய்வு…. 3 சிறுமிகளை மீட்ட அதிகாரிகள்…. கடும் எச்சரிக்கை….!!!

தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்த 3 சிறுமிகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், கோழிப்பண்ணைகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 சிறுமிகள் சில நிறுவனங்களில் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் சிறுமிகளை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக 3 நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும் அந்த 3 சிறுமிகளையும் அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது 20,000 முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி எச்சரித்துள்ளார்.

Categories

Tech |