Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு.. முயற்சிகள் வீணாகும்..பொறுமையாக இருங்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று நினைத்தது நிறைவேறும் நாளாகவே இருக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெற மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் முயற்சிகள் வீணாகும்.

இன்று பொறுமையாக இருங்கள் எந்தவித குழப்பமும் அடையாதீர்கள். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாகத்தான் உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் கொஞ்சம் தாமதமாக வந்து சேரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனமாக இருங்கள். இன்று உடல்நிலையிலும் கவனமாக இருங்கள்.

சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொண்டு தூங்கச் செல்வது ரொம்ப நல்லது. இன்று  மாணவச் செல்வங்கள் கடுமையாக உழையுங்கள், உழைத்து பாடங்களைப் படியுங்கள். முயற்சிகள் இன்று சற்று வீணாக கூடும். ஆகையால் நிதானத்தை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். ஆசிரியர்களின் சொல்படி கவனமாகவே நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெளிர் நீல நிறம்

Categories

Tech |