தென் அமெரிக்காவில் வெனிசுலா என்ற நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக, அந்நாட்டின் லாஸ் தெஜேரியாஸ் மாகாணத்தை ஜூலியா புயல் தாக்கியுள்ளது. இங்கு கனமழை மற்றும் புயல் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை மற்றும் நிலச்சரிவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கனமழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 34 ஆக அதிகரித்துள்ளது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 60 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.