இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள “நித்தம் ஒரு வானம்” திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. இந்தத் திரைப்படத்தில் ரித்தி வருமா, சிவாத்மிகா ராஜசேகர் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதனை அடுத்து வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளத்தில் “ஆகாசம்” என்ற தலைப்பில் உருவாகி வருகின்றது.
I HAVE WEDDING NEWS also.. https://t.co/JffiphW3Qi
Dedicating to my dear friend @iamharishkalyan 😎💪🏽 #UnakkenaNaan
— Ashok Selvan (@AshokSelvan) October 10, 2022
சமீபத்தில் வெளியான இப்படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் மற்றும் டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “உனக்கென நான்” என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இப்பாடலை என் அன்பு நண்பன் ஹரிஷ் கல்யாணுக்கு சமர்பணம் செய்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. “நித்தம் ஒரு வானம்” என்ற திரைப்படத்தில் அசோக் செல்வன் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.