Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…முன்யோசனையுடன் செயல்படுங்கள்..வீண் கவலை தோன்றும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும் நாளாகவே இருக்கும். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள் என்பதில் இன்று சந்தேகம்தான். இன்று எதிலும் தேவையற்ற வீண் கவலை கொஞ்சம் உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் கொஞ்சம் உண்டாகலாம். அதனால் உடல் சோர்வு கொஞ்சம் ஏற்படலாம்.

கூடுமானவரை நிதானமாக இருங்கள். சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள், என்று எதைப் பற்றியும் நீங்கள் தீர ஆலோசிக்காமல் செய்வது ரொம்ப நல்லது இல்லை, இதில் மட்டும் நீங்கள் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் கோபத்தை மட்டும் கட்டுப்படுத்திக் கொள்வது ரொம்ப நல்லது.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |