Categories
மாநில செய்திகள்

பனைமரம் ஏற கருவி…. கண்டுபிடிப்பவருக்கு ஒரு லட்சம் பரிசு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஆபத்தில்லாமல் பனைமரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாள்தோறும் பனையேறும் தொழிலாளர்கள் காரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் மரம் ஏறி இறங்குகிறார்கள். இதுவரை மரம் ஏறுவதற்கு சரியான கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த போட்டியில் பல்கலை தனியார் நிறுவனம் முன்னோடி விவசாயி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம்.

இந்த சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்வு செய்ய அரசு தேர்வு குழுவற்றை அமைத்துள்ளது. மேலும் கருவியை கண்டுபிடிப்பதற்கு ஆகும் செலவினம் மற்றும் கருவியின் செயல் திறன்,அதற்கான விலையில் உண்மை தன்மை இயந்திரத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கு விருது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும். இதற்கு www.tnhorticulture.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |