Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில் பேனா, பேப்பர் கொடுத்து… குடும்பத்தோடு ஸ்பார்ட்ல இருந்த உதயநிதி…! செம ட்விஸ்ட் கொடுத்த கலைஞர் ..!!

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தான புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  கலைஞர் எப்போவுமே என்ன சொல்வார் என்றால் ?  அவருக்கு தலைவர் அண்ணா தான், அண்ணா தான் அவருக்கு எப்பவுமே தலைவராக இருந்திருக்கிறார். அதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு…

கலைஞர் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது,  கோபாலபுரம் இல்லத்தில்…  அவருக்கு அப்போது பேச்சு இல்லை, பேசுவதை நிறுத்திவிட்டார். பேனாவை பிடித்து எழுவதற்கு கூட கைகள் நடுங்கி கொண்டு இருந்தது. அப்போது மருத்துவர்கள் வந்து தந்தையாரிடத்தில், சித்தப்பா தமிழரசு எல்லோரும் அவர்கள் சந்திக்கும்போது…  நான் அங்கே இருந்திருந்தேன்.

அப்போது அவரிடத்திலே ஒரு பேப்பரை கொடுத்து, பேனாவை கொடுத்து உங்களுக்கு பிடித்த பெயரை எழுதுங்கள் என்று கலைஞர் இடத்திலே பேனாவை கொடுக்கும் போது… எல்லாரும் போட்டி போடுவார்கள் தலைவர் என் பெயரை தான் எழுதுவார் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் தலைவர் எழுதிய ஒரே பெயர் அண்ணா, கடைசி வரை அவர் அண்ணாவின் தொண்டராகவே அந்த அளவிற்கு அவர் அண்ணா மீது தொண்டராக இருந்து நம்மை எல்லாரையும் விட்டு பிரிந்து சென்று விட்டார் என மனதில் இருந்த தாத்தாவின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

Categories

Tech |