Categories
உலக செய்திகள்

“இது எங்களுக்கு மிகவும் கவலை அளிக்கிறது…. உக்ரைன் -ரஷியா போர் குறித்து நாளை கூடுகிறது “ஜி 7 நாடுகள் ஆலோசனை கூட்டம்”…. வெளியான முக்கிய தகவல்….!!!!

உக்ரைன்-ரஷியா போரை நிறுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 8  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். மேலும் ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. இது குறித்து இந்தியா வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி  கூறியதாவது. உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்பு மீது கொடூரமான தாக்குதல் ரஷியா நடத்தி வருகிறது. இதில் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை தெரியவில்லை. இதனை பார்த்து இந்தியா மிகவும் கவலை கொண்டுள்ளது. மேலும் நாங்கள் சண்டையை நிறுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியையும் எடுக்க தயாராக இருக்கிறோம். இரு நாட்டு தலைவர்களிடமும் நாங்கள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளோம்.

இந்நிலையில் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் அனைத்து தேசங்களின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை ஆகிய கொள்கைகளை உலக அளவில்  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை  நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 2  நாட்களுக்கு முன்பு கிரீமியாவையும், ரஷியாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து ரஷியா உக்ரைன்  தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து ஏவுகணை மூலமாக குண்டு வெடிப்பை நடத்தியுள்ளது.இந்த தாக்குதலில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஷிய தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஜி 7 நாடுகள் அமைப்பு நாளை அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.

Categories

Tech |