பிரபல நாட்டில் திடீரென கரையொதுங்கிய திமிங்கலங்களை ஏன் காப்பாற்றவில்லை என்பது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் உள்ள சாத்தம் தீவு மற்றும் பிட் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை 490 திமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு கூறியதாவது. இந்த பகுதியில் சுறா மீன்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அவற்றை காப்பாற்றுவது மிகவும் கடினம். மேலும் மனிதர்கள் மற்றும் திமிங்கிலங்களை சுறாக்கள் தாக்கலாம். ஆனால் இந்த திமிங்கலங்களை உயிருடன் பயிற்சி பெற்ற குழுவினரால் கருணை கொலை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை அரசு தொழில்நுட்ப கடல்வாழ் ஆலோசகர் தவே லண்ட்குவிஸ்ட் உதவியுடன் செய்யப்பட்டது. மேலும் இது குறித்த அவர் கூறியதாவது.
இந்த முடிவு எளிதில் எடுக்கப்பட்டதில்லை. ஏனென்றால் மிக இரக்க தன்மை கொண்ட இறுதிவாய்ப்பு இந்த முடிவு ஆகும். மேலும் அவற்றின் உடல்கள் இயற்கையான முறையில் அழுகுவதற்கு விடப்படும். இந்த பகுதியில் கடந்த 2017- ஆண்டு ஆயிரம் திமிங்கலங்களும், 2018-ஆம் ஆண்டு 700 பைலட் திமிங்கலங்களும் கரையொதுங்கியது. இந்த திமிங்கலங்கள் சுமார் 20 அடி நீளம் வரை வளரக்கூடியவை. மேலும் இவைகள் சமூக அமைப்புடன் வாழக்கூடியவை அதனால் தன்னுடைய இணை ஆபத்தில் சிக்கி இருக்கும்போது அதனை இந்த திமிங்கிலங்கள் பின் தொடர்ந்து செல்லும். அப்படி கரையையொட்டி உணவு கிடைக்கும் போது அதை உண்ட பின் வழி தெரியாமல் கரையொதுங்கி இருக்க கூடும் எனக் கூறியுள்ளார். மேலும் இவ்வளவு திமிங்கிலங்கள் கரை ஒதுங்குவதற்கான காரணம் பற்றி தெரியாமல் விஞ்ஞானிகள் உள்ளனர்.