Categories
சென்னை மாநில செய்திகள்

ஹலோ… ஹாய்… நான் பிரியா பேசுறேன்… மயக்கும் பெண் குரல்… மயங்கிய ஆண்கள்… விசாரணையில் திடுக் தகவல் ….!!

பெண்கள் குரலில் பேசி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

பெண்ணைகளை  ஏமாற்றி விட்டதாக கூறிய ஒரே மாதிரியான புகார்கள் மயிலாப்பூர் சைபர் கிரைம் பிரிவுக்கு ஆன்லைன் மூலம் வந்தது. அப்போது சம்மந்தபட்டவர்களின் முகவரியை அணுகும் போது எந்த புகாரையும் கொடுக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். அதில் காவல் உதவி ஆய்வாளரின் உறவினரான உதயராஜ் என்பவரும் இதே போன்ற  புகாரை கொடுத்ததாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.

அப்போது போலீசார் விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகின. லோகண்டோ என்ற செயலில் வேலைக்காக விண்ணப்பித்த போது பிரியா என்ற பெண் ரூ 100 செலுத்தினால் ஆபாசமாக உரையாடலாம் என்று விளம்பரம் செய்திருந்ததை பார்த்தேன். நானும் ரூ 100 அனுப்பியதும் சம்பந்தப்பட்ட பெண் தனது நிர்வாண படத்தை போனுக்கு அனுப்பினார். இதையடுத்து 1000 ரூபாய் அனுப்புங்கள் வீடியோ கால் பேசலாம்  என்று கேட்டார் பிரியா.

நானும் 1500 ரூபாய் செலுத்தினேன் ஆனால் சம்பந்தப்பட்ட பெண் வீடியோ காலில் வரவில்லை. ஆனால் இப்படி ஏமாற்றமடைந்த நான் போலீஸ்சில் புகார் கொடுத்ததாக புகார் அளித்ததாக எனது போனுக்கு SMS வந்துள்ளது என்று உதயராஜ் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

இதையடுத்து உதயராஜ் செல்போனுக்கு வந்த நம்பரை டிராக் செய்த போலீசார் அது திருநெல்வேலி மாவட்டத்தை காட்டுவதாகவும் , அங்குள்ள பனங்குடி பகுதியில் இருப்பதாகவும் உறுதி செய்த போலீஸ்சார் படையுடன் பிரியாவை பிடிக்க  விரைந்தனர் அப்போதுதான் அங்கு போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மயக்கும் குரலில் பேசி பல ஆண்களிடம் வசூல் வேட்டை நடத்தி மோசடி  செய்தது ராஜ்குமார் ரீகன் என்ற இளைஞர் என்பது.

இதையடுத்து ராஜ்குமார் ரீகனை பிடித்த போலீசார் விசாரணையை தொடர்ந்தனர். அதில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த ராஜ்குமார் ரீகன் 2015-ஆண்டு முதல்லொகண்டோ செயலி செயலி குறுஞ்செய்தி அனுப்பி பிரியா என்ற பெயரில் ஒரு மணி நேரம் ஆபாசமாக பேசு ஆயிரம் ரூபாயும் ,  வீடியோவில் பேச 1,500 ரூபாயும் , எஸ்எம்எஸ் அனுப்பி பேச 500 ரூபாய் என்று விலை பட்டியல் நிர்ணயித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ரீகன் லொகண்டோ செயலி மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் துபாய் , மலேசியா , அமெரிக்கா போன்ற பல்வேறு வெளிநாட்டு ஆண்களையும் கவர்ந்து பேசியுள்ளார் . ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பேசி  லட்சக்கணக்கில் மோசடி செய்து செய்த இவர் வீடு கார் என சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Categories

Tech |