சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கர்ணாமூர்த்தி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கார்த்திகேயன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலாஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுனர் கண்டக்டர் உள்பட 18 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Categories