சிம்மம் ராசி அன்பர்களே, இன்று முயற்சிகளில் வெற்றி கிடைத்து முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும். உடன் பிறப்புகளால் விரையம் கொஞ்சம் ஏற்படும், நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து கொடுப்பார்கள், உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். இன்று உங்கள் மீது மற்றவர்கள் கோபம் படும்படியாக நடந்து கொள்வீர்கள். இன்று மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும், பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
சிலரிடம் சில்லறை சண்டைகளும் சரியாகும். இன்று முக்கியமாக வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் பொறுமையாகவே செல்லுங்கள். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள், அது போதும். இன்று யாருக்கும் எந்தவித பஞ்சாயத்துகளும் செய்ய வேண்டாம். மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்