கொரோனா பரவலுக்கு பின்னர் உலக நாடுகளில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 2023 ஆம் ஆண்டு மிக மோசமானதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் IMF தெரிவித்துள்ளது. உக்ரைன் போர், கொரோனா வைரஸ் மற்றும் வட்டி விகிதங்களை ஏற்றி வரும் நாடுகள் என்று பல விஷயங்களை IMF சுட்டி காட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகின் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் மட்டுமே இருக்கும் என கணித்துள்ளது.
மேலும் பணவீக்கம் 9.5 சதவீதத்தை எட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும் வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதாரங்கள் அதிகரித்த வெளிப்புற கடன் செலவுகள், உயர் பணவீக்கம் மற்றும் நிலையற்ற பொருட்கள் சந்தைகளை எதிர்கொள்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.