தமிழகம் முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்று பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த ஒலியுடன் அதாவது சத்தம் குறைந்த அளவில் காற்று மாசு தடுக்கும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே எடுக்க வேண்டும். திறந்தவெளியில் ஒன்று கூடி ஒன்றாக பட்டாசுகளை வெடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிக்க கூடாது. சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்ற உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு பசுமை பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தியதோடு மாசு அளவை குறைக்கும் மூலப் பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்யவும். மேலும் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கவும் அறிவுறுத்தியது.அதனால்தான் ஒவ்வொரு வருடமும் மாநில முழுவதும் பட்டாசுகள் வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.