மிதுனம் ராசி அன்பர்களே, இன்று வளர்ச்சி கூடும் நாளாகவே இருக்கும். வாகனம், வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் சிறப்பை கொடுக்கும். பழைய கடன்களை கொடுத்து மகிழும் நாள் வாய்ப்புகள் கிட்டும். இன்று பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள், வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்.
குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும், ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று ஆனந்தம் கொள்ளும் நாளாகவே இருக்கும். காதலர்களுக்கு இன்று காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். இன்றைய நாள் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்வீர்கள். வெளியூரில் இருந்தும் உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். அதனால் மகிழ்ச்சி ஏற்படும், மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் எந்தவித தடையும் இல்லாமல் முன்னேற்றம் ஆகவே செல்லும்.
ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பும் சக மாணவரின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும், கவலை வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும், அதுமட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிஷ்ட எண்; 6 மற்றும் 3
அதிஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்