Categories
உலக செய்திகள்

100 கோடி மக்களுக்கு மனநல பிரச்சனைகள் இருக்கிறது…. அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா பொது செயலாளர்…!!!

ஐ.நா சபையின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், உலகில் மொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் மனநல பிரச்சனைகளுடன் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

உலக மனநல தினத்திற்காக நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் தெரிவித்ததாவது, உலகில் மனநலம் பாதிப்படைந்தவர்களை பாதுகாக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

உலக நாடுகளில் மொத்தமாக சுமார் ஒரு பில்லியன் மக்கள் மனநல பிரச்சினைகளுடன் இருக்கிறார்கள். சில நாடுகளில், ஒவ்வொரு ஒரு லட்சம் நபர்களுக்கும் மனநல பணியாளர்கள் இருவர் தான் இருக்கிறார்கள். இது மிகவும் வேதனையளிக்கக் கூடியதாக இருக்கிறது. இளைஞர்கள், மனநல பிரச்சினைகளால் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

எனவே, அவர்களுக்கு சுகாதார சேவைகளை மேம்படுத்த வேண்டும். உலக நாடுகளில் முன்னுரிமை அடிப்படையில் மனநல பாதிப்பை மேம்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |