Categories
மாநில செய்திகள்

இப்படி செய்ய நினைத்தால்?…. தமிழர் நிலத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர்!….. சீமான் கடும் எச்சரிக்கை….!!!!!

ஒன்றிய உயர்க ல்வி நிலையங்களிலும், ஒன்றிய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது.

இதனால் இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தற்போது சீமானும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் பல்வேறு தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டும் ஒரு மொழிப் போர் வெடிக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்து இருக்கிறார்.

Categories

Tech |