ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று குடும்ப சுமை கூடும் நாளாகவே இருக்கும், கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். வியாபாரிகள் விலகிச்செல்வார்கள் குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். சேமிப்பு உயரும், இன்று மனதில் தைரியம் பிறக்கும். வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்றுக்கொடுப்பீர்கள். உயர்மட்ட பதவியில் உள்ளவர்கள் நட்பு கிடைக்கும்,
அவர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களின் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்பிற்கு ஏற்ற பலன் இன்று கிடைக்கும். உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாகவே அமையும். இன்று மாணவச் செல்வங்கள் கல்வியில் நாட்டம் மிகுந்து காணப்படும். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பும் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்