மேஷம் ராசி அன்பர்களே, இன்று வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாளாகவே இருக்கும். வரவும், செலவும் சமமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகள் ஆதாயம் எதிர்பார்த்தபடி கொஞ்சம் கிடைக்காது. கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்னை தலைதூக்கி கொண்டே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும்.
கூடுமானவரை மனைவியிடம் பேசும் பொழுதோ மனைவி, மனைவிமார்கள் கணவரிடம் பேசும் பொழுது கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள். பொறுமையாகவே நடந்துகொள்ளுங்கள், பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனத்தில் கவலையைக் கொஞ்சம் ஏற்படுத்தும், பக்குவமாக அவரிடம் பேசுவது ரொம்ப நல்லது. இன்று நிதானத்தை மட்டும் கடைபிடித்தால் ரொம்ப சிறப்பாகவே இருக்கும் இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் பெறுவார்கள். கோபத்தை மட்டும் குறைத்துக் கொண்டு சக மாணவர்களிடம் பேசுங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெளிர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்