உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளுக்கு உள்ளம் வெள்ளநீர் புகுந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான ஹெக்டர் விளைநிலங்களும் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திய மாநில ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை 12ஆம் தேதி வரை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., மதரசா கல்வி வாரியம் மற்றும் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் பள்ளிகள் உள்ளிட்ட அலிகாரில் இன்று 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கனமலழையால் ஏற்பட்ட இடிமின்னல் தாக்கியதில் கான்பூர் தெகாத் மாவட்டத்தில் வசித்த இரண்டு பேர் சில நாட்களுக்கு முன் உயிர் இழந்தனர். 8 வளர்ப்பு பிராணிகளும் உயிரிழந்தது. உத்தரபிரதேசத்தில் மழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு அடைந்து உள்ளது. மேலும் 17 மாவட்டங்களில் 900 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புக்கு 8.43 லட்சம் மக்கள் அவதியில் உள்ளனர். ஜான்சி நகரில் மட்டுமே இடி, மின்னலுடன் ஏழு பேர் உயிரிழந்து உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.