இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 10 வருடங்களுக்கு முன் தனித்த ஆதார் அடையாள எண் பெற்று இதுவரை புதிய விவரம் எதுவும் சேர்க்காத நபர்கள் உடனடியாக அந்த விவரங்களை சேர்க்க வேண்டும் என்று அரசு முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தங்களுடைய அடையாள மற்றும் இருப்பிட சான்றுகளை உரிய கட்டணம் செலுத்தி மை ஆதார் இணையதளம் மூலமாகவோ அல்லது இ சேவை மையங்கள் மூலமாக இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.