செவ்வந்தி எனும் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர்தான் நடிகை திவ்யா. இவரும், மற்றொரு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் நடித்து வரும் நடிகர் அரணவ்வும் ஏற்கனவே ஒரு தொடரில் இணைந்து நடித்தனர். இந்நிலையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து இரண்டு பேரும் ஒரே வீட்டில் 2 ஆண்டுகளாக சேர்ந்து வசித்து வந்தனர். இந்நிலையில் தன் கணவர் அரணவ், கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், இதனால் எந்நேரத்திலும் தனது கரு கலையலாம் என்றும் கூறி நடிகை திவ்யா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.
அதுமட்டுமின்றி தன் கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோக்களையும் வெளியிட்டார். அந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியது. அதன்பின் பதிலுக்கு அரணவ், மனைவி திவ்யாவின் மீது தன் தரப்பு நியாயங்களை கூறி புகாரளித்து வருகிறார். இந்நிலையில் நடிகை திவ்யா அளித்த புகாரின்படி நடிகர் அர்ணவ்-க்கு போலீஸ் சம்மன் அனுப்பி இருக்கிறது. அதாவது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. நடிகர் அர்ணவ் மீது போரூர் அனைத்து மகளிர் காவல்துறை 3 வழக்குகள் பதிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.