தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன திவ்யா தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இதற்கிடையில் நடிகர் அர்ணவ் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. திவ்யா அவர் மீது போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில், படப்பிடிப்பிற்கு செல்வதாக கூறி தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் அர்ணவ் எனக்குதான், ‘I LOVE YOU டா’ என்று ‘செல்லம்மா’ சீரியல் நடிகை அன்ஷிதா, திவ்யாவிடம் போனில் மிரட்டும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளதால், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.