Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அடேங்கப்பா!…. ஒரே நாளில் 10,000 பேர் கார் புக்கிங்…. வரலாற்று சாதனை படைத்த டாடா…..!!!!

இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு நிறுவனங்கள் புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இவற்றில் புதிய அறிமுகமாக டாடா டியோகோ EV காருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த காருக்கான புக்கிங் திறந்த ஒரே நாளில் 10,000-க்கும் அதிகமானோர் புக்கிங் செய்துள்ளனர். இது எந்த ஒரு கார் நிறுவனமும் EV கார் புக்கிங்கில் செய்யாத சாதனையாகும். இந்த காரின் அறிமுகவிலை ரூ.8.49 லட்சம் ஆகும். இதுதான் EV கார்களிலே குறைந்த விலை என்று கூறப்படுகிறது.

அத்துடன் இப்போது புக் செய்யப்பட்ட கார்கள் அனைத்தும் ஜனவரி 2023 முதல் டெலிவரி செய்யத் தொடங்கப்படும். அதுமட்டுமின்றி கார் நிறம் மற்றும் வகைக்கு ஏற்ப கார் டெலிவரி நாள் மாறுபடும். இந்த கார் 5 நிறத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்பின் 19.2kwh பேட்டரி பேக்குகள் கொண்ட கார்கள் 250 கிலோ மீட்டர் மற்றும் 24kwh பேட்டரி பேக்குகள் கொண்ட கார்கள் 315 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கிறது. இந்த கார் 10 -80 % வரையிலான சார்ஜிங் வெறும் 57 நிமிடத்தில் செய்யக்கூடிய fast charging வசதிகளைக் கொண்டுள்ளது.

Categories

Tech |