அபிஷேக் சர்மா இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராம் சேது. இவற்றில் அக்ஷய்குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ், நுஷ்ரத் பருச்சா, நாசர், பிரவேஷ் ராணா, ஜெனிபர் பிசினாடோ உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த படத்தை அமேசான் பிரைம் வீடியோ, அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் போன்றவற்றுடன் இணைந்து கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது.
இத்திரைப்படம் புராண இதிகாசமான ராமாயணத்தில் ராமரால் கட்டப்பட்ட பாலத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. தமிழ், இந்தி மொழிகளில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. ராம் சேது திரைப்படம் வரும் அக்டோபர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
உங்களுக்கு #RamSetu ஓட first glimpse பிடிச்சுருக்கா.? அப்போ கண்டிப்பா Trailer இன்னும் பிடிக்கும்
இந்த தீபாவளிய #RamSetuஓட பிரமாண்ட உலகத்துல குடும்பத்தோட கொண்டாடுங்க#RamSetu. 25th October. Only in Theatres worldwide.https://t.co/1JFD6o9bwH— Akshay Kumar (@akshaykumar) October 11, 2022
அதுமட்டுமின்றி இந்த படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் அக்ஷய்குமார் தமிழில் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அவற்றில் உங்களுக்கு ராம் சேது ஓட முதல் கிளிம்ப்ஸ் பிடிச்சுருக்கா.?, அப்போ கண்டிப்பா டிரைலர் இன்னும் பிடிக்கும். இந்த தீபாவளியை ராம் சேது ஓட பிரமாண்ட உலகத்துல குடும்பத்தோட கொண்டாடுங்க என பதிவிட்டுள்ளார்.