பல்வேறு மாநிலங்களில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 2020 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும். தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது.
அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு மார்ச் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்திலும் 6 ராஜ்யசபா எம்பி தேர்தலும் அதே தேதியில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 6ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13ம் தேதி என்றும், தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து புதியதாக தேர்ந்தெடுக்கப்படும் ஆறு எம்பிகள் யார் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 3 உறுப்பினர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது.