Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தி தெரியல எதுக்குடா ? எல்லாமே BJPயினர் தான்… நெட்ல பொய் பாக்க சொன்ன துரை வைகோ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, இணையத்தில் போனால் பாஜகவினர் கருத்துக்களை பார்க்கலாம்.  இன்டர்நெட் போயிட்டு பாத்தீங்கன்னா..  பிஜேபி சார்ந்த நிறைய  அமைப்புகள், அவங்கள சார்பு நிர்வாகிகள்..  ஆங்கிலம் வேண்டாம்,  ஆங்கிலம் ஆங்கிலேயருடைய அடிமை சின்னம். ஆங்கிலமே இருக்க கூடாது.

அப்படி வெளிப்படையாக ஒரு கருத்தை வைக்கிறாங்க. இந்திய அரசியலமைப்பு சட்டம் படி தமிழ் மொழி உட்பட 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கணும்னு தான் அன்னைக்கு சொல்லி இருக்காங்க, அதுதான் எங்களுடைய கருத்து. இந்தி மட்டும் தான் இருக்கணும்,  இந்தி தெரியலன்னா இருக்க கூடாது என மத்திய அரசு சொல்லுது.

உதாரணத்துக்கு பாத்தீங்கன்னா.. ராமேஸ்வரம் பக்கத்துல மீனவர்கள் ஏழு பேரை அடித்து துன்புறுத்தி இருக்காங்க. அதை  இலங்கை கடற்படை பண்ணல, இந்திய கடற்படை பண்ணி  இருக்காங்க. அது  என்னன்னா….  மீனவர்களுக்கு இந்தி தெரியல எதுக்குடா ? என்று சொல்லி,  அவமானப்படுத்தி அவர்களை துன்புறுத்தி இருக்காங்க. இது பத்திரிக்கை நண்பர்களுக்கு எல்லாம் தெரியும். இந்த மாதிரியான சூழல்   இருக்கும்போது, தமிழக பாஜக தமிழுக்காக ஆர்ப்பாட்டம் வைக்கிறது  எல்லாம் கேலிப்புதான விஷயமாகத்தான் பார்க்கின்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |