புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ குறைந்த விலையில் அதிக நாட்களை கொண்ட புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தால் ரீசார்ஜ் திட்டங்களில் அதிக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது . பல்வேறு புதிய திட்டங்களை அந்நிறுவனம் அறிவித்து வருகிறது.
இந்த வரிசையில் ரூ.49 மற்றும் ரூ.69 மதிப்புகளில் மேலும் ஒரு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதில் ரூ.49 திட்டத்தில் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் ஜியோ அழைப்பு , 250 நிமிடங்கள் மற்ற நிறுவனங்களுக்கான அழைப்பு , 4ஜி வேகத்தில் 2GB இன்டர்நெட் சேவை , 25 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட ஆஃபர்கள் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல முதல்முறையாக அறிமுகப்பட்டுத்தப்பட்ட ரூ.69 ஜியோ திட்டத்தில் 14 நாட்களுக்கு அன்லிமிடெட் ஜியோ அழைப்பு , 250 நிமி மற்ற நிறுவன அழைப்பு , 25 எஸ்எம்எஸ்கள் மற்றும் 7 ஜிபி டேட்டாவை அந்த நிறுவனம் வழங்க இருக்கின்றது.
மேலும் ரூ.155 மதிப்பில் கொடுக்கப்பட்ட ஜியோபோன் ஆல் இன் ஒன் திட்டம் , 28 நாட்கள் validity கொண்ட இதில் 1 நாளுக்கு 4G வேகம் கொண்ட 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் ஜியோ அழைப்பு மற்றும் 500 ஐயுசி நிமிடங்கள் வழங்கப்படுவதாக JIO அறிவித்துள்ளது.