Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒன் லைன் ஆர்டர்” எடிட்டிங்கில் புதிய வடிவம் கொடுத்த மணிரத்தினம்…. பிரபல ஒளிப்பதிவாளர் சொன்ன தகவல்….!!!!

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது மிகுந்த பொருட்செலவில் உருவான இந்த படத்திற்கு எதிர்பார்த்தபடி தமிழக மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நாவலை கடந்த பல வருடங்களுக்கு முன்பே இருந்து படித்து ரசித்த அதன் வாசகர்கள் இந்த கதை எப்படி  படமாக்கப்பட்டிருக்கிறது என்பதை காண்பதற்காகவே ஆவலுடன் தியேட்டர்களுக்கு வருகின்றனர். அதே நேரம் இந்த படத்தின் காட்சிகளை படமாக்கிய மணிரத்தினம் எடிட்டிங் டேபிளில் அதன் ஆன்லைன் ஆர்டர் வரிசையை அப்படியே கலைத்து போட்டு புது வடிவம் கொடுத்தார் என இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் பிரசாந்த் சில புதிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதாவது மற்ற படங்களில் வழக்கமாக இடம்பெறுவது போல தான் படத்தில் உள்ள கதாநாயகர்கள் கதாநாயகர்கள் வரிசையாக அறிமுகப்படுத்தும் விதமாகத்தான் முதலில் அவர் ஒன்லைன் ஆர்டர் எழுதி இருந்தார். ஆனால் அதன்பின் கதை தொடங்கும்போதே ஒரு கதை சொல்லின் உதவியுடன் படத்தை தொடங்க வேண்டி இருந்ததால் ஆரம்பத்தில் விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை மட்டும் முதலில் அறிமுகப்படுத்தி ஒன்லைன் நாடக காட்சிகளின் வரிசையை மாற்றியுள்ளாராம் மணிரத்தினம். மேலும் இந்த கதைக்கு இடைவெளி விடுவதற்கு என எந்த குறிப்பிட்ட காட்சியும் இல்லாத காரணத்தினால் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தின் பிளாஷ்பேக் காட்சியில் இடைவேளை விடும் முடிவையும் எடிட்டிங் போது தான் மணிரத்தினம் எடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |