Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான LTC வசதி…. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை(DA) 34-ல் இருந்து 38 சதவீதம் ஆக அரசு உயர்த்தி இருக்கிறது. இப்போது மத்திய அரசு ஊழியர்களையும், அவர்களது குடும்பங்களையும் மகிழ்விக்கும் மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது. அரசின் புது முடிவின் கீழ் ஜம்மு-காஷ்மீர், அந்தமான், நிக்கோபார் தீவுகள், லடாக் மற்றும் வட கிழக்கு பகுதிகளுக்கு போக மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு விடுப்பு பயணச்சலுகை (LTC) வசதியை 2 வருடங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. அரசாங்கத்தின் புது முடிவுக்குப் பின் தகுதியான அனைத்து மத்திய ஊழியர்களும் 25 செப்டம்பர் 2024 வரை இவ்வசதியைப் பெற முடியும்.

இதுகுறித்து பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், விடுப்பு பயணச்சலுகை (எல்டிசி) திட்டம் 26 செப்டம்பர் 2022ல் இருந்து 25 செப்டம்பர் 2024 வரை 2 வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவ்வசதியின் கீழ், மத்திய அரசின் தகுதியான ஊழியர்கள் எல்டிசியில் பயணம் செய்யும்போது ஊதியத்துடன்கூடிய விடுப்பு மற்றும் பயண டிக்கெட்டுகளுக்குரிய தொகையையும் பெறுகின்றனர். ஆகவே தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஜம்மு-காஷ்மீர், வட கிழக்கு லடாக், அந்தமான், நிக்கோபார் போன்ற பகுதிகளுக்கு போக எல்டிசி வசதியைப் பெறலாம் என உத்தரவில் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் விமானப் பயணத்திற்கு தகுதி இல்லாத அரசு ஊழியர்களும் இந்த மாநிலங்களுக்கு விமானத்தில் போக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். ஜம்மு -காஷ்மீர், அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளுக்கு அவர்களின் தலைமையகத்திலிருந்து எந்த ஒரு விமானம் வாயிலாக நேரடியாக எகானமி வகுப்பில் அவர்கள் பயணம் செய்யலாம். அதே சமயத்தில் எல்டிசியை தவறாகப் பயன்படுத்தினால், அது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் ஊழியர் விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020ம் வருடத்திலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் இந்த வசதியின் காலத்தை 2 வருடங்களுக்கு நீட்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |