புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கவிதா ராமு. இவர் ஆட்சி நிர்வாக பணியுடன் நடனத்திலும், சமூக ஊடங்களிலும் தீவிரமாக இயங்குபவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்சிரியரின் இன்ஸ்டாகிராமில் கணக்கில் நேரடி தகவல் வெளிவந்த மாணவர்கள் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விட கோரி உள்ளனர். இதற்கான ஸ்கிரீன்ஷாட்களை இன்று தனது முகநூலில் கவிதா ராமு பகிர்ந்து உள்ளார். அதில், “கலெக்டர் அம்மா உங்களின் முடிவில் தான் எங்களின் சந்தோசம் இருக்கு. ப்ளீஸ், செல்லம், கோயில் கட்டுறேன் என மாணவர்கள் பலரும் தங்களின் விண்ணப்பங்களை இன்ஸ்டா வழியே அனுப்புகின்றனர்.
ஆட்சியரின் முகநூல் பதிவு தற்போது வேகமாக பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் முழுவது விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறை விடும்போது மழை ஓடிப் போய்விடும் என்பது போல அன்றைக்கு மழை பெய்யாமல் வெயில் அடித்தது. இதனையடுத்து மழை வந்தால் விடுமுறை விடப்படுமா என தொலைக்காட்சியின் முன் அமர்ந்து கிடந்த காலம் கடந்து, நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கும் அளவிற்கு மாணவர்கள் சமூகம் வளர்ந்து விட்டது.