”கலைஞருக்கும் தமிழுக்குமான அந்த உறவு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ”கலைஞருக்கும் தமிழுக்குமான அந்த உறவு” என்ற இந்த நூலை வெளியிடுவதற்கு எனக்கும், யாருக்குமே அருகதை கிடையாது, நம்முடைய அன்பில் மகேஷ் அவர் சொன்னது போல… தாத்தா உடைய நூலை வெளியிட பேரன் வந்திருக்கிறேன் என்று… நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, அங்கு படிக்கும்போது மற்ற அத்தனை பாடங்களிலுமே நான் எப்பவுமே ஒரு ஜஸ்ட் பாஸ்தான், என்னுடைய தந்தையார், தலைவர் வந்து…..
ரொம்ப கண்டிப்பான தந்தையாக இருந்ததில்லை, படி படி என்றெல்லாம் சொன்னது கிடையாது… பாசாகிடு போதும் என்று சொல்வார். என்னுடைய அம்மா கொஞ்சம் கண்டிப்பானவர்கள், நிறைய பேருக்கு தெரியும்..எங்கள் அம்மா எவ்வளவு கண்டிப்பானவர்கள் என்று… எல்லா பாடல்களிலும் ஜஸ்ட் பாஸ் ஆகி விடுவேன்.. 40 மதிப்பெண், 50 மதிப்பெண் வாங்குவேன், ஆனால் தமிழில் மட்டும் கண்டிப்பாக ஒரு 85, 90 மதிப்பெண், வகுப்பிலே முதல் அல்லது இரண்டாவது வந்து விடுவேன். அதற்கு நான் முக்கிய காரணமாக நான் நினைப்பது… சின்ன வயதில், பள்ளிக்கூடம் படிக்கும் போது.. கோபாலபுரம் இல்லத்தில் தான் நான் வளர்ந்தவன்.
கலைஞருடைய பேச்சு, அவருடைய கூட்டங்கள் முடிந்தவுடன்.. அது டேப் ரிக்கார்டில் ரெக்கார்டு ஆகி வீட்டிற்கு வரும். அப்போது அத்தனை பேருக்கு தெரியும். கோபாலபுரத்தில் முதல் ரூமில், இப்போ நம்முடன் அவர் இல்லை, திரு.சண்முகநாதன் அவர்கள்…. அவர் கூடவே தான் நான் இருப்பேன். அவர் தான் என்னை தூக்கி வளர்த்தவர். அங்கே விடிய விடிய உட்கார்ந்து கொண்டு அங்கே ப்ரூப் பார்ப்பார்கள், அந்த பேச்சை டேப் ரிக்கார்டில் வரும். அதை ரெக்கார்ட் பண்ணி போட்டு பார்த்துவிட்டு, குட்டி புலி அவர்கள் ஷார்ட் எழுதி இருப்பார்கள், அது டைப் அடித்து முரசொலிக்கு வரும். அப்போது நான் சண்முகம் அவர்களுடம் உட்கார்ந்து, முரசொலிக்கு நான் ப்ரூப் பார்த்திருக்கிறேன். இதுதான் எனக்கும் கலைஞருக்குமான அந்த தமிழ் உறவு. அது மட்டும் தான் காரணம் என நினைக்கின்றேன். நான் தமிழில் ஓரளவிற்கு மதிப்பெண் பெற்றதற்கு என தெரிவித்தார்.