திருநெல்வேலியின் ருசியான இடிசாம்பார்.. கிராமத்தின் மனம் வீசும் சாம்பார்..
வறுத்து இடித்து கொள்ள தேவையானவை:
துவரம் பருப்பு – 200 கிராம்
காயபொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி – 1 டீஸ்பூன்
வத்தல் – 15
வெந்தயம் – 1 டீஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
காய்கறிகள்:
மாங்காய் – 1
அவரைக்காய் – 5
பீன்ஸ் – 5
கேரட் – 2
கத்தரிக்காய் – 3
முருங்கைக்காய் – 1
தக்காளி – 3
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தேங்காய் – 3 துண்டு
செய்முறை:
வறுக்க தேவையான அனைத்து பொருட்களையும் வறுத்து இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள். காய்கறிகளை நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.சின்ன வெங்காயம் உரித்து வைத்து கொள்ள வேண்டும்.
துவரம் பருப்பு நல்லா வேகவைத்து கொள்ளவேண்டும் முதலில், அதோட மஞ்சள் பொடி, காயபொடி போட்டு வேகவைக்கவேண்டும்.நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை புளி கரைசல் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
பின்னர் வேக வைத்து வைத்திருக்கும் பருப்பை கடஞ்சி எடுத்து கொள்ளுங்கள். காய்கறி அவிஞ்சுதும் அதில் கடைந்து வைத்திருக்கும் பருப்பை கொட்டி, அதில் இடித்து வைத்திருக்கும் மசாலா பொடி, இடித்து வைத்திருக்கும் தேங்காய், உப்பு ஆகியவை போட்டு கொதிக்க வையுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி அதி கடுகு உளுந்தைப்பருப்பு போட்டு பொறிந்ததும், கறிவேப்பிலை, மல்லி தழை போட்டு தாளித்து சாம்பாரில் ஊற்றினால் வரும் மனம் நாவில் எச்சி ஊற வைக்கும்..