Categories
Tech டெக்னாலஜி

WOW! சூப்பர்…. IPHONE வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. கூடிய விரைவில் 5ஜி சேவை அறிமுகம்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவை கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட மாடல் ஃபோன்களுக்கு மட்டுமே 5ஜி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், ஐபோன்களில் 5ஜி சேவை குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ஐபோன் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவது குறித்து ஏற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டால், நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவை அமலுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஆனால் ஐபோன் நிறுவனம் இது தொடர்பான எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் ஐபோன்களில் 5ஜி சேவையை பெறுவதற்கு மென்பொருள் புதுப்பிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் முதல் கட்டமாக ஆப்பிள் போன்களில் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE 3-வது ஜெனரல், ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 13 மினி, ஐபோன் 12 போன்ற மாடல்களில் மட்டுமே 5ஜி தேவையானது இந்தியாவில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |