Categories
மாநில செய்திகள்

நான் பேங்க் மேனேஜர் பேசுறேன்….. ரூ3,00,00,000 மோசடி….. 3 பேர் கைது….!!

வங்கி ஊழியர் போல பேசி ரூபாய் 3 கோடி மோசடி செய்த மூன்று நபர்களை டெல்லியில் வைத்து தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மக்களிடம் வங்கியில் பணிபுரியும் நபர்கள் போல செல்போனில் பேசி புதிய ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, கடன் உள்ளிட்டவற்றை வழங்குவதாக கூறி ஓடிபி என் ஏடிஎம் அட்டையின் ரகசிய எண் உள்ளிட்டவற்றை சூசகமாக பெற்றுக்கொள்வர். அதன்பின் அவர்களது வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அபேஸ் செய்து விடுவர்.

இந்நிலை தமிழகத்தில் பலரிடம் தொடர இது குறித்த புகார் மத்திய குற்றப்பிரிவு பிரிவில்  குவிந்த வண்ணம் இருக்க வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், அந்த மர்ம கும்பல் ரூபாய் 3 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்த மோசடியில் ஈடுபட்ட 3 பேர் டெல்லியில் தலைமறைவாகி இருப்பதை கண்டறிந்து டெல்லிக்கு விரைந்து சென்ற தமிழக காவல்துறையினர் தீபக், தேவகுமார், வில்சன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விமானம் மூலம் சென்னை அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது  தமிழகம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த கும்பல் பல கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |