Categories
தேசிய செய்திகள்

இனி இங்கு விவசாயக் கழிவுகளை எரித்தால்…. ஏக்கருக்கு ரூ.2,500 அபராதம் தான்…. அதிரடி நடவடிக்கை….!!!!

குருகிராமில் விவசாயக்கழிவுகளை எரித்தால் அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகமானது முடிவு செய்து இருக்கிறது. 

ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் விவசாயக்கழிவுகளை எரிப்பதால் சுற்றுக்சூழல் மாசடைகிறது. இதை தடுக்க மாநில அரசும், மாவட்ட நிர்வாகங்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஹரியாணா மாநிலமான குருகிராமில் மரக் கன்றுகள், விவசாயக் கழிவுகள் எரிப்பதை தடுக்கும் விதமாக அபராதம் விதிப்பதற்கு மாவட்ட நிர்வாகமானது முடிவு செய்துள்ளது.

மாவட்டத்தில் விவசாயக் கழிவுகளை எரிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய்.2,500 அபராதம் விதிக்கப்படும் என துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். அத்துடன் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |