இலியானாவை ரசிகர்கள் கேலி செய்து பதிவிட்டு வருகின்றார்கள்.
தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இதை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைபடத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையானார்.அதன்பின் தமிழில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இலியானா தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இலியானா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது தற்போது கடற்கரையில் நீச்சல் உடை எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார். இதை பார்த்து ரசிகர்கள் திருமணமும் வேண்டாம் சினிமாவும் வேண்டாம். பீச்சில் நீச்சல் உடையில் மட்டும் இருந்தால் போதுமா என கண்டனம் தெரிவித்தும் கேலி செய்தும் பதிவிட்டு வருகின்றார்கள். இது தற்போது பரபரப்பாகி வருகின்றது.