இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏராளமான சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் உலக அளவில் அதிகமாக பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைதள செயல்களின் முக்கியமான ஒன்று facebook. இந்த செயலியில் ஒரு பல கோடிக்கும் அதிகமான மக்கள் கணக்குகள் வைத்துள்ளனர். பேஸ்புக்கில் இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கணக்கிலிருந்து அதிகபட்சமாக 5 ஆயிரம் நபரோடு மட்டுமே நட்பில் இருக்க முடியும். இதனால் குறிப்பிட்ட அந்த ஆயிரம் நபர்களுக்கான லிமிட் முடிந்துவிட்டாலும் அவருடன் தொடர்பில் இருக்க விரும்புவர்களுக்கான பாலோ என்ற ஆப்ஷனை பேஸ்புக் வழங்கி உள்ளது.
பேஸ்புக்கில் அதன் நிறுவனர் மார்க் உள்ளிட்ட பல பிரபலங்கள் திடீரென பாலோயர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளனர். மார்க் சுமார் 12 கோடி பாலோயர்களை இழந்துள்ளார். வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினும் ஒன்பது லட்சம் பேரை இழந்திருக்கிறார். இதை சரியாக்க வேலை நடந்து வருவதாகக் கூறியுள்ள பேஸ்புக், சிரமத்திற்கு வருந்துவதாகக் கூறியுள்ளது.