பாகுபலி மூன்றாம் பாகம் குறித்து டைரக்டர் ராஜமௌலி சூசகமாக கூறியுள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தின் பிரபாஸ், சத்யராஜ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் பாகுபலி திரைப்படம் வெளியாகி உலக அளவில் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது. பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் 2000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதையடுத்து ரசிகர்கள் பாகுபலி திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்கள்.
பாகுபலி மூன்று திரைப்படம் குறித்து பிரபாஸிடம் கேட்டபோது, பாகுபலி மூன்றாம் பாகம் எடுப்பது எனது கையில் இல்லை. அது இயக்குனர் ராஜமௌலி கையில் தான் இருக்கின்றது என பிரபாஸ் கூறி இருந்தார். இந்த நிலையில் இயக்குனர் ராஜமவுலி பாகுபலி மூன்றாம் பாகம் பற்றிய அறிவிப்பு வரும் என மறைமுகமாக கூறியிருக்கின்றார். அவர் கூறியதாவது, பாகுபலி இரண்டாம் படத்தின் கிளைமாக்ஸில் மூன்றாம் பாகத்துக்கான தொடர்பு இருக்கும். பாகுபலி மூன்றாம் படத்தை உருவாக்கும் விருப்பம் இருக்கின்றது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கையில் தான் இருக்கின்றது எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.