கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு பகுதி அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் வளர்ச்சி பணிவுகளை கண்காணிக்க மாவட்ட கலெக்டரான சமீரன் சென்றுள்ளார். அப்போது அவர் மாலேகவுண்டம்பாளையத்தில் உள்ள ரேஷன் கடைக்கும் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வில் அவர் ரேஷன் கடையில் உள்ள விற்பனை நிலையம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்ட விவரம் மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை குறித்த பதிவுகளை கேட்டு அறிந்தார்.
மேலும் அரிசி பாமாயில் துவரம் பருப்பு சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு குறைவாக உள்ளதை அவர் கண்டறிந்தார். இதனால் கடையின் விற்பனையாளருக்கு அபராதம் விதித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.