தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் புதிய டீனாக சிவகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முந்தினம் புதிய டீனாக சிவகுமார் என்பவர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தரத்தை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 136 கோடியில் பல் மருத்துவமனை கட்டப்படும். இதற்கான பணிகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என பேசினார்.