என் பிசிஐ இன்டர்நேஷனல் பேமென்ட் லிமிடெட் ஐரோப்பிய கட்டண சேவை வேர்ல்ட் லைன் உடன் கூட்டு சேர்த்திருப்பதால் இந்தியர்கள் விரைவில் ஐரோப்பாவில் யுபிஐ மூலமாக பணம் செலுத்திக் கொள்ள முடிகிறது. nipl என்பது இந்திய தேசியக்கொடுப்பளவு கழகத்தின் பிரிவாகும் nipl மற்றும் வேல்டுலைன் கூட்டணி அமைத்திருப்பதன் முக்கிய நோக்கம் ஐரோப்பா முழுவதும் இந்திய கட்டண முறைகளை ஏற்றுக்கொள்வது விரிவுபடுத்துவது ஆகும். மேலும் இந்த வலுவான கூட்டணி வணிகர்களின் பாயிண்ட் ஆப் சேல் அமைப்புகளை யுபிஐயில் இருந்து பணம் செலுத்த அனுமதி அளிக்கிறது. அதன் மூலமாக ஐரோப்பாவில் உள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை ஏற்படுத்தி தரப் போகின்றது.
இந்தியாவில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் தற்போது இன்டர்நேஷனல் கார்டு நெட்வொர்க் மூலமாக மட்டுமே பணத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் இனிமேல் இந்த வாடிக்கையாளர்களும் அவர்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ஐரோப்பாவில் பணம் செலுத்த முடிகிறது. யு பி ஐ தற்போது உங்களை ஒரே ஸ்மார்ட்போனில் ஒன்றிற்கும் மேற்பட்ட பல வங்கி கணக்குகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கிறது. இதன் மூலமாக வனிகர்களும் வாடிக்கையாளர்களும் ஏராளமான பலன்களை பெறுகின்றார்கள்.
கடந்த 2021 ஆம் வருடம் தரவுகளில் யூபி வாயிலாக செய்யப்படும் டிரான்ஸ்க்ஷன்கள் 38.74 பில்லியன் ஆகவும் அதன் மொத்த மதிப்பு 954.58 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது. இந்த நிலையில் இதுவரை 714 மில்லியன் மேம்படுத்தப்பட்ட ரூபாய் கிரெடிட் கார்டுகளை எம்.பி.சிஐ உள்நாட்டு மக்களுக்கு விநியோகித்திருக்கின்றது. பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் இந்த செயல்முறையை விரிவுபடுத்த நினைப்பதாக என் பி சி ஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த கூட்டணியின் மூலமாக ஐரோப்பிய சந்தைகளுக்கு நல்ல கவரேஜ் கிடைக்கிறது என nipl இன் தலைமை நிர்வாகி ரித்தேஷ் சுக்லா தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டணியானது இந்திய வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான கட்டண முறைகள் தொடர்ந்து அதிகாரம் அளிக்கும் என நம்பப்படுகின்றது.