நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது கே.வி ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறந்தவர்களை தேர்வு செய்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகின்றது.இந்தியாவில் இருக்கக்கூடிய முக்கியமான மொழிகளான அஸ்ஸாமி , பெங்காலி குஜராத்தி உள்ளிட்ட 23 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது தற்போது அறிவிக்கப்படுகிறது. இதில் தமிழ் மொழியில் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற ஜெயஸ்ரீ என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற மலையாள நாவலை அதே பெயரில் தமிழ் மொழியில் வெளியிட்டதாக, சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.டெல்லியில் இருக்கக்கூடிய சாகித்ய அகாடமி கட்டிடத்தில் வேறொரு நாளில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் இவர்களுக்கு விருது வழங்கப்படும். சாகித்திய அகாதமி விருது வெற்றி பெற்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் , நினைவு பரிசும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.