Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இருதயகோளாறு , நீரிழிவு நோயினை உண்டுபண்ணும் மைதா உணவுகள் … அதிர்ச்சிளிக்கும் ஆய்வு ரிப்போர்ட் .!!

மைதா மாவு கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒருவகை உணவுப் பொருளாகும். இதில் நார்சத்து சுத்தமாக இல்லை மேலும் இதனை ரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர்.

மைதா உணவு மிகவும் ருசியான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடம்பிற்கு பலவிதமான தீமைகள் ஏற்படுகின்றன.

இப்பொழுது நாம் ஏன் மைதா உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்:

மைதா உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் உள்ளது. இந்த உணவை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது உங்கள் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையும்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மைதா உணவு அதிகம் உண்பவர்களுக்கு 90 சதவீதம் சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதா அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும்.

மேலும் இது உங்களுக்கு உடல் பருமன், இருதய கோளாறு , இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டுவரும். இந்த  உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும்.

ஏனெனில் இதில் ஏராளமான இரசாயனம் மற்றும் வேதிப் பொருட்கள் உள்ளன உணவுகளை அதிகம் உண்டு வந்தால் உங்கள் ரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும் முக்கியமாக உங்கள் இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய கோளாறு, இரத்த குழாயில் அடைப்பு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.

எனவே அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. நாம் விரும்பி உண்ணும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும்.

மைதா உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு  பெப்டிக் அல்சர், பித்தப்பை கல், சிறுநீரக கல், இருதய கோளாறு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

நமது உடலில் 150 மில்லி கிராம் அளவுக்கு மேல் கெட்ட கொழுப்பு இருப்பது ஆபத்தானது எனவே அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்.

Categories

Tech |