Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் தற்போது கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்க சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |